சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
காய்கறிகள் |
நூல்கோல் - Knol Khol![]() நூல்கோல், பிராசிகா ஒலரேசியா (Brassica oleracea) குடும்பத்தைச் சேர்ந்த ஆண்டுக்கு இருமுறை மண்ணுக்குள் விளையும் காய்கறி ஆகும் . இது நூக்கல், நூற்கோல் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நூல்கோலின் தண்டு மற்றும் இலைகளும் சமைத்து உண்ண ஏற்றது. நூல்கோலில் வைட்டமின்கள் ஏ, ஈ, சி மற்றும் மாங்கனீசு, பீட்டா கரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. நூல்கோல் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் உறுதியாகவும் பயன்படும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது. மேலும் இதன் ஊட்டச் சத்துக்கள் இரைப்பை மற்றும் குடல் அமைப்பின் தரத்தை மேம்படுத்துகிறது. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் பனிக் காலத்தில் கூடுதலாக ஏற்படும். நுரையீரலில் தேங்கும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு நூல்கோல் மிக நல்ல தீர்வைக் கொடுக்கும். நூல்கோலின் மேல் உள்ள தண்டும் அதன் மேல் உள்ள கீரையிலும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகின்றது. நூல்கோலில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று. இதில் மிக அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்கும். உடல் கழிவுகளை வெளியேற்றி, எடையை குறைக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த நூல்கோல் வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு பெருங்குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சருமத்தில் உள்ள தோல் பகுதிகள், சுருக்கம், கோடுகள் இருப்பவர்கள் உணவில் அதிகமாக நூல்கோலை சேர்க்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயம் சம்பந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் நூல்கோலை உணவில் அடிக்கடி சேர்த்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நூல்கோலின் இலையில் அதிக அளவில் ஃபோலேட் சத்தும் உள்ளதால் இதயத்தை பாதுகாக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். புற்றுநோய் கட்டிகள் உருவாவதை தடுக்கும். உடலில் உள்ள வீக்கங்கள், வலிகளைக் குறைக்கும் ஆற்றல் உடையது. ரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம். நூக்கலில் பீட்டா கரோட்டின் உட்பட, கரோட்டின்களின் சத்துக்கள் அடங்கி உள்ளதால் கண்களில் ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு கண்களுக்கு பாதுகாப்பு தருகிறது. மேலும், இதிலுள்ள வைட்டமின் ஏ மாகுலர் சிதைவைத் தடுக்கவும், கண் புரையின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பொட்டாசியத்துடன் நூக்கலில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் இது இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமான இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகளைத் தடுக்கிறது. நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் இந்தக் காயை அடிக்கடி சாப்பிடலாம். நூக்கல் சாறு 45 மி.கி. சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், புற்றுநோய், இதய நோய், கீல்வாதம், மூல நோய், அதிக கொழுப்பு, கல்லீரல் நோய், மாதவிடாய் அறிகுறிகள் போன்ற பல உடல் நலப் பாதிப்புகளைத் தடுக்கிறது. நூல்கோல் இலைகளில் ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால், இதயத்தை சீராக செயல்படவைத்து, பெருங்குடலையும் காக்க செய்கிறது. நூக்கலின் வேர்கள், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. நூல்கோலின் பிஞ்சு காய்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சமைத்து சாப்பிடும்போது தாய்ப்பால் நன்றாக சுரக்கும். அத்துடன், நரம்பு தளர்ச்சி பாதிப்பை குறைத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. நூல்கோல்களின் சாறுகள், பாத வெடிப்புக்கு சிறந்த மருந்தாகும். |