சமையல் குறிப்புகள்
சாத வகைகள்

காய்கறி சாதம்

vegetable rice

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கோப்பை
கேரட் - 1
பீன்ஸ் - 50 கிராம்
குட மிளகாய் - 1
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1
பட்டை - 2
கிராம்பு - 3
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 1
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும்.

2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

4. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.

5. பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறு தணலில் நன்றாக வதக்கவும்.

6. அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அடிக்கடி கிளறி விடவும்.

7. பிறகு தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.

8. அடுத்து ஆறிய சாதத்தைப் போட்டு குழையாமல் கிளற வேண்டும்.

9. இதனுடன் மிளகு தூளைச் சேர்த்து கிளறி, சிறிது நேரம் சிறு தணலில் வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. சாதம் விறைப்பாக இருந்தால் தான் காய்கறி சாதம் சுவையாக இருக்கும்.

2. வெள்ளை மிளகுத் தூள் சேர்த்தால் சாதம் நிறம் மாறாமல் இருக்கும்.

3. காய்கறிகளை தனியாக வேக வைத்து, பின்னர் சேர்த்தும் செய்யலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.