சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சாத வகைகள் |
புளி சாதம் ![]() தேவையான பொருட்கள் அரிசி - 1/4 கிலோ புளி - ஒரு நெல்லிக்காய் அளவு பூண்டு - ஒரு கட்டி கறிவேப்பிலை - 2 கொத்து காய்ந்த மிளகாய் - 3 பெருங்காயம் - 2 சிட்டிகை வெந்தயத்தூள் - 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 3 சிட்டிகை கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி நிலக்கடலை - 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அரிசியை வேகவைத்து, சாதத்தை அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்து கொள்ளவும். 2. புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். 4. வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டுத் தாளிக்கவும். 5. அடுத்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, வெந்தயத்தூள், பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 6. இதில் புளிக்கரைசலை ஊற்றி உப்பைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 7. இந்த கரைசல் நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது இறக்கி வைக்கவும். 8. நிலக்கடலையை நெய்யில் வறுத்து இதில் கொட்டவும். 9. பிறகு ஆறிய சாதத்தை இதில் போட்டு கிளறி வைக்கவும். குறிப்பு 1. புளிக்காய்ச்சலை ஒரு வாரம் வரை வைத்து தேவைப்படும் போது சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். 2. தேவைப்பட்டால் பொட்டுக்கடலையையும் எண்ணெய் அல்லது நெய்யில் வறுத்துச் சேர்க்கலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |