சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சாத வகைகள் |
குஸ்கா ![]() தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கோப்பை கடலைப் பருப்பு - கால் கோப்பை எண்ணெய் & வெண்ணெய் - 5 தேக்கரண்டி பட்டை - ஒன்று ஏலம் - ஒன்று கிராம்பு - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி புதினா - எட்டு இதழ் கொத்துமல்லித் தழை - 2 மேசைக்கரண்டி தக்காளி - சிறியது ஒன்று பச்சை மிளகாய் - ஒன்று மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி தயிர் - இரண்டு தேக்கரண்டி எலுமிச்சம் பழம் - அரை பழம் (சிறியது) உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அரிசி மற்றும் கடலைப் பருப்பை களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். 2. அரிசி குக்கரில் எண்ணெய் & வெண்ணெயை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடிக்க விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயத்தை சிவக்க விட வேண்டாம். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். 4. ஒரு கோப்பை அரிசிக்கு ஒன்றரை குவளை (டம்ளர்) தண்ணீரும், கால் கோப்பை பருப்பிற்கு அரை குவளை (டம்ளர்) தண்ணீரும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து அரிசி குக்கரில் வேக விடவும். 5. அரிசி குக்கர் இல்லை என்றால் சாதா குக்கரிலும் வைக்கலாம். 6. சாதம் வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான குஸ்கா ரெடி. இதை கிச்சிடி என்றும் சொல்லலாம். குறிப்பு 1. குஸ்கா ஒரு சுவையான காலை நேர உணவாகும். சூடாக கொத்து மல்லி துவையல் (அ) புதினா துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். 2. மதிய உணவிற்கு என்றால் மீன் குழம்பு, கார குழம்பு வகைகள் பொருந்தும். 3. வெண்ணெய் வேண்டாம் என்றால் வெறும் எண்ணெயே போதுமானது. நெய்யில் தாளித்தாலும் சுவை நன்றாக இருக்கும். ஆக்கம் ஜலீலா பானு
துபாய். |