ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

இனிப்பு அப்பம்

தேவையான பொருட்கள்

மைதா - 100 கிராம்
ரவை - 100 கிராம்
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 150 கிராம்
வாழைப்பழம் (தேன் வாழை / பூவாழை) - 1
ஏலக்காய் - 1 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 லிட்டர்
சோடா உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டி, கெட்டியாகக் கலக்கவும்.

2. இதனுடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலக்கவும்.

3. பிறகு இதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கெட்டி பதத்திற்கு கரைத்து அரை மணி நேரம் ஊற விடவும்.

4. பிறகு வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒரு கரண்டியில் மைதா, ரவை கலவையை எடுத்து எண்ணெயில் ஊற்றி வேகவிட்டு திருப்பிப் போட்டு நன்கு சிவந்ததும் எண்ணெய் வடிகட்டி எடுக்கவும்.

குறிப்பு

1. வாழைப்பழம் சேர்ப்பதால் மிருதுவாக இருக்கும்.

2. எண்ணெயை அதிகமாக காய வைத்து மாவை ஊற்றினால் அப்பம் உள்ளே வேகாமல் இருக்கும். எனவே மிதமான சூட்டில் வேக விடவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888