சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

சுளியன்

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 1/4 கிலோ
வெல்லம் - 200 கிராம்
மைதா - 1/4 கிலோ
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு, சோடா உப்பு - தலா 2 சிட்டிகை
எண்ணெய் - 1/2 லிட்டர்

செய்முறை

1. கடலைப் பருப்பை முக்கால் வேக்காடு வேக வைத்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்.

2. பருப்பை ஒன்றிரண்டாக மசித்து, தூளாக்கிய வெல்லம், ஏலக்காய்த்தூள் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

3. பிறகு வேறொரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவுடன் சிறிது தண்ணீர், உப்பு, சோடா உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் தோசை பதத்திற்கு கலக்கவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டிய கடலைப் பருப்பு உருண்டைகளை மைதா கரைசலில் முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு

1. கடலைப் பருப்பை அதிகம் வேக வைத்தாலும், சர்க்கரை அதிகம் சேர்த்தாலும் உருண்டை பிடிக்க வராது.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.