ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

ரவா கேசரி


தேவையான பொருட்கள்

ரவை - 2 கோப்பை
சர்க்கரை - 1 1/2 கோப்பை
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 50 கிராம்
கேசரி பவுடர் - சிறிதளவு

செய்முறை

1. ரவையை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

2. பாத்திரத்தில் 5 கோப்பை தண்ணீர் விட்டு(ஒரு மடங்கு ரவைக்கு 2 1/2 மடங்கு தண்ணீர்), அதில் கேசரி பவுடர் சிறிது சேர்த்து கொதிக்க விடவும்.

3. பிறகு இதில் வறுத்த ரவையை கொட்டி கிளறி விடவும்.

4. ரவை வெந்தவுடன் சர்க்கரையை கொட்டி பிறகு ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி விடவும்.

5. பின்னர் 2 ஸ்பூன் நெய், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

6. இக்கலவையை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி விருப்பமான வடிவில் வெட்டவும்.

குறிப்பு

1. ரவா கேசரி செய்யும் போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து செய்தால் சுவை கூடும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888