சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

உருளைக்கிழங்கு இனிப்பு வடை

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3 (1/4 கிலோ)
சர்க்கரை - 1 கப்
பிரெட் தூள் - 1 கப்
சோள மாவு - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 3 (பொடித்தது)
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துக் கொள்ளவும்.

2. பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சோளமாவு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மாவில் சிறிதளவு எடுத்து வடை வடிவத்தில் தட்டையாக தட்டி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

4. தனியே ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தண்ணீர் விட்டு கம்பிப் பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.

5. பொறித்த உருளைக்கிழங்கு வடைகளை காய்ச்சி வைத்திருக்கும் ஜீராவில் போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு பின்னர் எடுத்து பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.