சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

பாசிப்பருப்பு உருண்டை

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 200 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 100கிராம்
ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. வாணலியை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பைப் போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

2. வறுத்த பாசிப்பருப்பை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக தூளாக்கி கொள்ளவும்.

3. பிறகு இதனுடன் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக மாவாக்கிக் கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி உருக்கிக் கொள்ளவும்.

5. சிறிது மாவில் ஒரு கரண்டி சூடான நெய்யை விட்டு கலக்கி உருண்டையாக பிடிக்கவும்.

6. நெய் சூடு ஆறிவிட்டால் உருண்டை பிடிக்க முடியாது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக மாவை எடுத்து சூடான நெய் ஊற்றி உருண்டை பிடிக்க வேண்டும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.