ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

கம்பு மாவு புட்டு

தேவையான பொருட்கள்

கம்பு மாவு - 200 கிராம்
பச்சரிசி மாவு - 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை - 150 கிராம்
தேங்காய்த்துருவல் - 1 கப்
பால் - 1/4 கப்
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கம்பு மாவையும், பச்சரிசி மாவையும் தனித்தனியே வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

2. இரண்டு மாவையும் ஒன்றாகக் கலக்கி, அதனுடன் சூடான பால், உப்பு சேர்த்து தெளித்து இரண்டு மாவையும் பிசறி 10 நிமிடம் ஊறவிடவும்.

3. ஊறிய மாவை இட்லி தட்டில் இட்டு 15 நிமிடம் ஆவியில் வேக விடவும்.

4. வேக வைத்த மாவு சூடாக இருக்கும் போதே அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய்த்துருவல், ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888