சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

கல்கண்டு உளுந்து வடை

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 50 கிராம்
உளுந்து - 200 கிராம்
கல்கண்டு - 200 கிராம்
ஏலக்காய் - சிறிதளவு
எண்ணெய் - 1/4 லிட்டர்

செய்முறை

1. உளுத்தம்பருப்பையும், பச்சரிசியையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து, கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கெட்டியாக அரைக்கவும்.

2. முக்கால் பதம் அரைத்ததும் கல்கண்டையும் ஏலக்காயையும் நன்றாக பொடித்து இதனுடன் சேர்த்து அரைக்கவும்.

3. மாவை மெத்தென்று அரைத்தவுடன், அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகச் சூடானதும், மாவை சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

4. இனிப்பு இதனுடன் சேர்ந்திருப்பதால் சீக்கிரம் கறுத்துவிடும். ஆனால் உள்ளே வேகாமல் இருக்கும். ஆகவே குறைவான தீயில் வேகவைத்து இருபுறமும் திருப்பிப் போட்டு நன்கு சிவந்ததும் வடித்து எடுக்கவும்.

குறிப்பு

1. உளுந்து மாவில் கல்கண்டு சேர்த்து அரைப்பதால் மாவில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகம் இருந்தால் வடை எண்ணெய் நிறைய உறிஞ்சும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.