ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

வேர்க்கடலை ரசகுல்லா

தேவையான பொருட்கள்

வறுத்த வேர்க்கடலை - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
மைதா - 50 கிராம்
எண்ணெய் - ¼ லிட்டர்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை

1. வறுத்த வேர்க்கடலையை தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து அரைக்கவும்.

2. கால் டம்ளர் வெந்நீருடன் மைதா, சோடா உப்பு, கேசரி பவுடர், அரைத்த வேர்க்கடலை கலவை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.

3. கையில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகள் எண்ணெயில் இட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.

5. தனியே ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சவும்.

6. பொறித்த உருண்டைகளை சூடாக இருக்கும் போதே சர்க்கரை பாகில் போட்டு ஊற விடவும். அரை மணிநேரம் கழித்து வேர்க்கடலை ரசகுல்லாவை எடுத்து பரிமாரவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.







எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888