ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

முந்திரி பர்பி


தேவையான பொருட்கள்

முந்திரி - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
நெய் - 50 கிராம்

செய்முறை

1. முந்திரியை தண்ணீர் ஊற்றாமல் மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் அடி கனமான வாணலி அல்லது கடாய் வைத்து, அரை குவளை (டம்ளர்) தண்ணீர் விட்டு, சர்க்கரை சேர்த்து கம்பி பாகு வரும் வரை கொதிக்க விடவும்.

3. அதனுடன் பொடித்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் சேர்த்து தொடர்ந்து நன்றாக கிளறி விடவும்.

4. கெட்டிப்பதம் வந்ததும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி விடவும்.

5. நுரைத்து பொங்கும் பதம் வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தட்டில் நெய் தடவி, அதில் கொட்டி துண்டுகளாகப் போடவும்.

குறிப்பு

1. அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.

2. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.

ஆக்கம்

கோ. சுந்தரேஸ்வரி
சென்னை - 600 101.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888