சமையல் குறிப்புகள்
இனிப்பு வகைகள்

அவல் புட்டு

வீடியோ


தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்
அவல் - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி - 5
திராட்சை - 10
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 கப்

செய்முறை

1. அவலை கழுவி பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

2. பிறகு ஒரு அகல பாத்திரத்தில் அவலை தண்ணீர் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

3. இதனுடன் சர்க்கரை, ஏலக்காய், திராட்சை, சிறிது சிறிதாக உடைத்த முந்திரி, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு

1. அவலை அதிக நேரம் ஊற வைத்தால் அவல் மாவாக ஆகி விடும்.

2. கெட்டி அவலாக இருந்தால் மட்டும் சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துச் செய்யலாம்.

3. முந்திரி திராட்சையை வறுக்கத் தேவையில்லை. முந்திரியை சிறிது சிறிதாக உடைத்து பச்சையாகவே சேர்க்கலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.