சமையல் குறிப்புகள்
ரசம் வகைகள்

பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்

துவரம்பருப்பு - கால் கோப்பை
தக்காளி - 2
புளி - சிறிய எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
பூண்டு - 4 பல்
உப்பு - தேவையான அளவு

பொடி செய்ய

துவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மல்லி - 3 தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3

தாளிக்க

கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

1. துவரம்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனியே கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

2. துவரம்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. இதனுடன் தக்காளியைச் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5. அதனுடன் பூண்டை எண்ணெயில் லேசாக வதக்கியோ அல்லது பச்சையாகவோ தட்டிப் போடவும்.

6. இது கொதித்ததும் தனியே பொடித்து வைத்த பொடியைப் போட்டு, ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பை நீருடன் சேர்க்கவும்.

7. அனைத்தும் கொதித்து நுரையுடன் பொங்கி வரும் போது இறக்கி வைக்கவும்.

8. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கிவைத்துள்ள ரசத்தில் சேர்க்கவும்.

குறிப்பு

1. விருப்பமுள்ளவர்கள் தாளிக்கும்போது பெருங்காயமும் சேர்க்கலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.