சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பொரியல் வகைகள் |
வாழைப்பூ பொரியல் ![]() தேவையான பொருட்கள் வாழைப்பூ - 1 பெரிய வெங்காயம் - 1 வர மிளகாய் - 3 கறிவேப்பிலை - 1 கொத்து எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி பருப்பு பொடி (அ) இட்லி பொடி - 1 தேக்கரண்டி தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி மோர் - 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. வாழைப்பூவில் இருந்து கெட்டியான காம்பை நீக்கி பின் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பிறகு சிறிது தண்ணீரில் மோர், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி, அதில் நறுக்கிய வாழைப்பூவைப் போடவும். இல்லையென்றால் பூ கருத்து விடும். 3. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 5. மோரில் உள்ள நறுக்கிய வாழைப்பூவை மட்டும் எடுத்து இதனுடன் சேர்த்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். 6. தண்ணீர் சுண்டி வாழைப்பூ நன்றாக வெந்ததும் பருப்பு பொடியை போட்டு கிளறி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். குறிப்பு 1. வாழைப்பூவை நறுக்கும் போது கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கருப்பாக படியாமல் இருக்கும். 2. வாழைப்பூவுடன் சிறிது பாசிப்பருப்பை அரை வேக்காடாக தனியே வேகவைத்து சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |