சமையல் குறிப்புகள்
பொரியல் வகைகள்

சேனைக்கிழங்கு பொரியல்

senaikkizhangu poriyal

தேவையான பொருட்கள்

சேனைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
வரமிளகாய் - 4
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. சேனைக்கிழங்கை முதலில் பெரிய துண்டுகளாக வெட்டி, கிழங்கு குழைந்து விடாமல் முக்கால் வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து போட்டு தாளிக்கவும்.

4. அதனுடன் கறிவேப்பிலை, வரமிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பின்னர் அதில் பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு, வேகவைத்து நறுக்கிய சேனைக்கிழங்கைப் போட்டு நன்கு வதக்கவும்.

6. அடுத்து தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. வெங்காயம் சேர்க்காமலும் இந்தப் பொரியலைச் செய்யலாம்.

2. வரமிளகாய்க்குப் பதில் மிளகாய்த்தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்தும் செய்யலாம்.

3. வேகவைத்த சேனைக்கிழங்கைப் போட்டதும் லேசாக கிளறவும். அதிகம் கிளறினால் கிழங்கு குழைந்துவிடும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.