சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
தேவிஸ் கார்னர் (www.deviscorner.com) - தற்போதைய வெளியீடு : அத்திப் பழம் - Fig |
சமையல் குறிப்புகள் |
பொரியல் வகைகள் |
புடலங்காய் பொரியல் ![]() தேவையான பொருட்கள் புடலங்காய் - 1 (200 கிராம்) பாசிப் பருப்பு - 25 கிராம் பெரிய வெங்காயம் - 1 கடுகு - 1/4 தேக்கரண்டி சீரகம் - 1/4 தேக்கரண்டி வரமிளகாய் - 3 பெருங்காயம் - 1 சிட்டிகை மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. புடலங்காயை அரை இஞ்ச் அளவிற்கு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. பாசிப் பருப்பை லேசாக வறுத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். 3. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். 6. அதனுடன் நறுக்கிய புடலங்காய், உப்பு சேர்த்து வேக வதக்கவும். 7. புடலங்காய் வெந்ததும், பாதி வேகவைத்த பாசிப் பருப்பை சேர்த்து கிளறவும். 8. இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. பாசிப் பருப்பு அரை வேக்காடாக குழையாமல் இருந்தால் தான் பொரியல் உதிரி உதிரியாக இருக்கும். இல்லையெனில் கூட்டு போல் ஒன்றாக ஒட்டிக் கொள்ளும். 2. பாசிப் பருப்பு சேர்க்காமல் செய்தால் அதற்கு பதிலாக இறக்கும் போது ஒரு தேக்கரண்டி கெட்டித் தயிர் சேர்த்து செய்தால் சுவை வேறு மாதிரி இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |