சமையல் குறிப்புகள்
பொரியல் வகைகள்

கொத்தவரங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்

கொத்தவரங்காய் - 1/4 கிலோ
வர மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் துருவல் - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. கொத்தவரங்காயை நீள வாக்கில் இரண்டு இரண்டாக விரல் நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்.

2. நறுக்கிய கொத்தவரங்காயை லேசாக வதக்கி, உப்பு சேர்த்து நீர் விட்டு வேக விடவும்.

3. ஒரு வெங்காயம், தேங்காய், மிளகாய், சீரகம் ஆகியவற்றை தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.

4. மற்றொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.

6. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், வேக வைத்த கொத்தவரங்காய், அரைத்து வைத்துள்ள மசால், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.

7. அடுப்பில் இருந்து இறக்கும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.