சமையல் குறிப்புகள்
பொரியல் வகைகள்

பீட்ரூட் பொரியல்

beetroot poriyal

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 1
தேங்காய் துருவல் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கடலைப்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பீட்ரரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி ஆவியில்(குக்கரில்) வேகவைத்துக் கொள்ளவும்

2. தேங்காயை தனியே துருவிக் கொள்ளவும்.

3. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பச்சை மிளகாயை இரண்டாக பிளந்து கொள்ளவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

6. பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

7. அடுத்து வேகவைத்த பீட்ரூட்டை தண்ணீரோடு சேர்த்து லேசாக வதக்கவும்.

8. அதில் உப்பு சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.

9. பிறகு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி இறக்கி வைக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.