ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
பொடி வகைகள்

பருப்பு சாத பொடி

தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை - 150 கிராம்
சிகப்பு மிளகாய் - 10
பூண்டு - 1
கொப்பரை தேங்காய் - 1 மேஜைக் கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
கல் உப்பு - 1 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

செய்முறை

1. வாணலியில் நெய் விட்டு சூடாக்கி பொட்டுக் கடலை, சிகப்பு மிளகாய் ஆகியவறை ஒரு சில நிமிடங்கள் வறுத்து ஆற வைக்கவும்.

2. இதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் நன்கு பொடிக்கவும். சல்லடை கொண்டு சலித்து கப்பியை மீண்டும் பொடிக்கவும்.

3. பின்னர் கடைசியாக கிடைக்கும் கப்பியுடன், கொப்பரை தேங்காய், பூண்டு சேர்த்து மிக்சியில் குறைந்த வேகத்தில் பொடிக்கவும்.

4. அனைத்தையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ சேமித்து வைக்கவும்.

குறிப்பு

1. பருப்பு சாத பொடியை சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888