சமையல் குறிப்புகள்
பாயச வகைகள்

பாசிப்பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 150 கிராம்
முந்திரி - 10
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 10
நெய் - 50 கிராம்
ஜாதிக்காய் - சிறிதளவு
மில்க் மெய்டு - 2 ஸ்பூன்

செய்முறை

1. முதலில் பாசிப் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

2. வறுத்த பாசிப் பருப்பை அரை லிட்டர் தண்ணீரில் பதமாக வேகவிடவும்.

3. பருப்பு வெந்ததும் வெல்லத்தைக் கொட்டி கிளறி விடவும்.

4. ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை, மில்க் மெய்டு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து இறக்கி வைக்கவும்.

5. விருப்பமானவர்கள் தேங்காயை பூ போல் துருவி சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு

1. தேவையானால் மில்க் மெய்டுக்கு பதில் பால் சேர்த்துச் செய்யலாம்.

2. வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரையும் சேர்த்து செய்யலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.