சமையல் குறிப்புகள்
பச்சடி வகைகள்

வாழைத்தண்டு பச்சடி

vaazhaith thandu pacchadi

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு - 1 (சிறியது)
கெட்டி தயிர் - 1 கோப்பை
கறிவேப்பிலை - சிறிதளவு
வர மிளகாய் - 3
கடுகு - 1/4 தேக்கரண்டி
உடைத்து உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வாழைத்தண்டை வட்டவட்டமாக நறுக்கி நார்களை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி மோர்த் தண்ணீரில் போடவும்.

2. பிறகு இதனை பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

3. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உடைத்த உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து, வேக வைத்த தண்டைப் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.

4. பிறகு கெட்டித் தயிரில் உப்பு சேர்த்து கலக்கி வேகவைத்து, தாளித்த வாழைத்தண்டில் கொட்டி ஒரு கிளறு கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. தயிர் கலந்த பின்பு அடுப்பில் வைக்கக் கூடாது.

2. தயிர் தண்ணியாகவும் இருக்கக் கூடாது.

3. வாழைத்தண்டு கறுக்காமல் இருப்பதற்காக மோர் தண்ணீரில் போடவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.