பழங்கள்

அத்திப் பழம் - Fig


Fig

உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப் பழமும் ஒன்று. அத்திப் பழம், சீமை அத்தி மற்றும் நாட்டு அத்தி என இரு வகைப்படும். ஒரே அத்தி மரத்தில் கொத்துக் கொத்தாக 180 முதல் 300 அத்தி பழங்கள் வரை காய்க்கும்.

அத்திப் பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.

இது சர்க்கரை நோய், புண், உடல் வீக்கம், கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு நல்ல பலன் தருகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்துவதிலும், தூக்கத்தை சீராக்குவதிலும் உதவுகிறது.

அத்திப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் வாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்படும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும். அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.

அத்திப் பழம் உணவை சீரணிக்க செய்து சுறுசுறுப்பைத் தந்து, பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை நீக்குகிறது. அத்திப் பழத்தைத் உண்பதால் தலை முடியும் நீளமாக வளர்கிறது.

சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.

நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 அத்திப் பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். ஒரு அவுன்ஸ் காய்ந்த அத்திப் பழங்களில் 300 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலைச் சரிப்படுத்த உதவும்.

சீமை அத்திப் பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் நாட்டு அத்திப் பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண் புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து, வெண் புள்ளிகள் மீது பூசலாம்.

அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப் பழங்களை காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒரு வேளை சாப்பிடலாம்.

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் அத்திப் பழத்தை தவிர்ப்பது நல்லது. அத்திப் பழம் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம், அதே போல் நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவில் அத்திப் பழத்தை சாப்பிட வேண்டும்.