சமையல் குறிப்புகள்
வற்றல் வகைகள்

ஜவ்வரிசி வற்றல்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 2 கோப்பை
பச்சை மிளகாய் - 10
புளித்த மோர் - 1 கப்
நெய் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஜவ்வரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

2. பச்சை மிளகாய், உப்பு, இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்து ஊறிய ஜவ்வரிசியுடன் சேர்க்கவும்.

3. ஒரு பெரிய பாத்திரத்தில் 3 அல்லது 4 கோப்பை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

4. ஜவ்வரிசி நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, புளித்த மோர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

5. நல்ல வெயிலில் துணியைப் பரப்பி, சிறு தேக்கரண்டியில் மாவினை எடுத்து சிறிய வட்டங்களாக ஊற்றவும்.

6. மூன்று அல்லது நான்கு நாட்கள் காய்ந்ததும், ஈரமில்லாத காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்கவும்.

குறிப்பு

1. தேவைப்படும் போது வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், ஜவ்வரிசி வற்றலைப் போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.