ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
வடகம் வகைகள்

ஜவ்வரிசி வடகம்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கிலோ
பச்சை மிளகாய் - 20
கசகசா - 50 கிராம்
பெருங்காயம் - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஜவ்வரிசியை நன்கு கழுவி முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.

2. ஊறிய ஜவ்வரிசியுடன், பச்சை மிளகாய், உப்பு, கசகசா, பெருங்காயம், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும்.

3. ஒரு பெரிய பாத்திரத்தில் மாவு அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அரைத்த ஜவ்வரிசி மாவை அதில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

4. ஜவ்வரிசி நன்கு வெந்து கூழ் போல் ஆனதும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

5. நல்ல வெயிலில் துணியையோ அல்லது பாலிதீன் பேப்பரையோ பரப்பி, சிறு தேக்கரண்டியில் மாவினை எடுத்து சிறிய வட்டங்களாக ஊற்றவும்.

6. மூன்று அல்லது நான்கு நாட்கள் காய்ந்ததும், ஈரமில்லாத காற்று புகாத பாத்திரத்தில் போட்டு சேமித்து வைக்கவும்.

குறிப்பு

1. தேவைப்படும் போது வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும், ஜவ்வரிசி வடகத்தைப் போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888