ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
சிற்றுண்டி வகைகள்

கோதுமை தோசை


தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கோப்பை
அரிசி மாவு - 1/2 கோப்பை
மைதா மாவு - 1/2 கோப்பை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

2. இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

3. பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், தோசை மாவை ஊற்றி சுற்றிலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, தோசை நன்கு சிவந்ததும் திருப்பிப் போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு

1. தோசையில் கொஞ்சம் புளிப்பு சுவை வேண்டுமென்றால், புளித்த தயிர் 1/4 கோப்பை அல்லது புளித்த இட்லி மாவு 1/2 கோப்பை சேர்த்தால் நன்றாக இருக்கும்.

2. தோசை மாவு கொஞ்சம் கெட்டியாக இருந்தால் தான் தோசை ஊற்றுவதற்கு நன்றாக வரும்.

3. கோதுமை தோசை ஊற்றுவதற்கு இரும்பு தோசைக் கல் அல்லது தண்டவாள தோசைக் கல் நன்றாக இருக்கும்.

4. தோசை ஊற்றியதும் அடுப்பின் தணலை குறைத்துக் கொள்ள வேண்டும். வேகமாக தணல் இருந்தால் தோசை எடுக்க வராது.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888