ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்
எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நூல்களை பல்வேறு நூல் பிரிவுகளில் வெளியிட உள்ளோம். ஆகவே நூலாசிரியர்கள் தங்களின் நூல்களைப் பதிப்பிக்க எம்மை தொடர்பு கொள்ளவும். பேசி/வாட்சப்: 9444086888 (தற்போது அச்சுக்கு தேர்வாகியுள்ள நூல்கள்: 5)

நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


சமையல் குறிப்புகள்
சூப் வகைகள்

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி - 5
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 6 பல்
சோள மாவு - 1 மேஜைக் கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேஜைக் கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும்.

5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.