ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
துணைக் கறிகள்

உருளைக்கிழங்கு தயிர் மசாலா


தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2 (பெரியது)
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
தயிர் - 1 கப்
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருபு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை இரண்டாக நீள வாக்கில் பிளந்து கொள்ளவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.

5. இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து சிவக்க வதக்கவும்.

6. பிறகு பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

7. அடுத்து இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. வெட்டி வைத்துள்ள வேகவைத்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.

9. பிறகு 1/2 குவளை (டம்ளர்) தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

10. நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு கெட்டி தயிரை இதில் சேர்த்து நன்றாகக் கலக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

1. இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு மட்டும் சேர்க்கவும். நிறைய சேர்த்தால் சுவை மாறிவிடும்.

2. கொதிக்கும் போது தயிர் சேர்த்தால் தயிர் தடதடவென இருக்கும். அதனால் அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து சேர்க்க வேண்டும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.







எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888