சமையல் குறிப்புகள்
கார வகைகள்

பஜ்ஜி


தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
வெங்காயம் அல்லது வாழைக்காய் - 2
அரிசி மாவு - 2 ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு -தேவையான அளவு

செய்முறை

1. கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

2. இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.

3. வெங்காயம் அல்லது வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ளவும்.

4. வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயம் அல்லது வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விடவும்.

5. பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறவும்.

குறிப்பு

1. கேரய், பீட்ரூட், முள்ளங்கி, கத்திரிக்காய், சௌசௌ என அனைத்து காய்களிலும் பஜ்ஜி செய்யலாம்.

2. மாவைக் கலந்தவுடன் பஜ்ஜியை இட வேண்டும். அப்போதுதான் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது.

3. எண்ணெய் சரியாக சூடாகாமல் பஜ்ஜி போட்டாலும் எண்ணெய் குடிக்கும்.

4. பஜ்ஜிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியோ, மிளகாய் சட்னியோ, வெங்காய சட்னியோ செய்தால் சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 037.








அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888