ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
ரசம் வகைகள்

தக்காளி ரசம்


தேவையான பொருட்கள்

தக்காளி - 3
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயத்தூள் ஆகியவற்றை தனியே நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. சிறிது தண்ணீரில் தக்காளியை உப்பு சேர்த்து கையால் கரைத்து தோலினை எடுத்து விடவும்.

3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. இதனுடன் கரைத்த தக்காளியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

5. பூண்டை தோல் உரிக்காமல் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

7. இதனுடன் நசுக்கிய பூண்டை போட்டு லேசாக ஒரு பிரட்டு பிரட்டி, தனி பாத்திரத்தில் வைத்துள்ள புளி, தக்காளி கரைசலில் சேர்க்கவும். பின்னர் இந்த கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

8. பிறகு இதனுடன் ரசப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வேக விடவும். ரசம் நுரைத்து ஒரு கொதி வந்த உடனே மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888