ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
இறால் உணவு வகைகள்

இறால் ஸ்பெஷல் வறுவல்

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1/4 தேக்கரண்டி
சோள மாவு - 1/4 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கொத்து (நறுக்கியது)
எண்ணெய் - 200 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

2. பிறகு இறாலுடன் சோள மாவு, அரிசி, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.

4. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

5. தனியே மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து பிரட்டவும்.

6. இதனுடன் மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பிலிருந்து இறங்கி சூடாக பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.







எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888