சமையல் குறிப்புகள் |
பக்கோடா வகைகள் |
வெங்காய பக்கோடா தேவையான பொருட்கள் பெரிய வெங்காயம் - 1/4 கிலோ கடலை மாவு - 100 கிராம் அரிசி மாவு - 50 கிராம் பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கொத்து எண்ணெய் - 1/4 லிட்டர் உப்பு - தேவையான அளவு செய்முறை 1. பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு அனைத்தும் சேர்க்கவும். 4. தேவைப்பட்டால் ஒரு தேக்கரண்டி தண்ணீர் தெளித்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பிசறிக் கொள்ளவும். 5. வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசிறி வைத்துள்ள கலவையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பரவலாக உதிர்க்கவும். 6. மிதமான தீயில் பொன்னிறமாக பொறித்து எடுத்து, எண்ணெயை வடியவிட்டு பின் பரிமாறவும். குறிப்பு 1. வெங்காயம் முடிந்தவரை பெரிதாக இருக்க வேண்டும். ஆக்கம் கோ. சுந்தரேஸ்வரி
சென்னை - 600 050. |
|
|
அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888 |
|