ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
பச்சடி வகைகள்

பீட்ரூட் பச்சடி

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1
பெரிய வெங்காயம் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 4
தயிர் - 1 கோப்பை
தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும்.

2. வெங்காயத்தை சன்னமாகவும், பச்சை மிளகாயை நீள வாக்கிலும் நறுக்கிக் கொள்ளவும்

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.

4. பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பீட்ரூட்டின் மேல் போடவும்.

5. அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும்.

6. பின்னர் தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888