ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
சிறுதானிய உணவுகள்

தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைக் கஞ்சி


தேவையான பொருட்கள்

தினை - அரை கோப்பை
அரிசி - கால் கோப்பை
குதிரைவாலி - அரை கோப்பை
பூண்டு பெரியது - ஒன்று
சீரகம் - ஒருதேக்கரண்டி
மிளகு - 3
தனியாதூள் - தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
சின்னவெங்காயம் - 6
தேங்காய்ப்பால் - ஒரு குவளை

தாளிக்க

எண்ணை + நெய் - 2 தேக்கரண்டி
சின்னவெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை - 4 இதழ்
வல்லாரைக் கீரை - 10 இதழ்

செய்முறை

1. தினை , குதிரைவாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

2. குக்கரில் அரிசி வகைகளை களைந்து சேர்க்கவும். அதில் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் சின்ன வெங்காயம், பூண்டையும் பொடியாக நறுக்கிச் சேர்த்து, தனியாத்தூள், மிளகு, சீரகம் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து முடிபோட்டு வேகவிட்டு 3 , 4 விசில் விட்டு இறக்கவும்.

3. ஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும். தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

4. கடைசியாக தனியாக தாளிக்கும் கரண்டியில் எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும். சுவையான தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைக் கஞ்சி தயார்.

குறிப்பு

1. பொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

ஆக்கம்

ஜலீலா கமால்
துபாய்.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888