ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
சிறுதானிய உணவுகள்

கம்பு பசலைக் கீரை அடை


தேவையான பொருட்கள்

கம்பு மாவு ‍ - 200 கிராம்
கரகரப்பாக திரித்த மிளகு தூள் ‍ - அரை தேக்கரண்டி
பசலை கீரை (பொடியாக நறுக்கியது) -‍ அரை கோப்பை
நெய் ‍ - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ‍ முன்று மேசைக்கரண்டி
பச்ச மிளகாய் ‍ ‍ (பொடியாக நறுக்கியது) - ஒன்று
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
தண்ணீர் ‍ ‍ - கால் கோப்பை / தேவையான அளவு
உப்பு ‍ - தேவையான அளவு

செய்முறை

1. கம்பு மாவை லேசாக வறுத்து கொள்ளவும்.

2. கம்பு மாவுடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

3. பிசைந்த மாவை சம உருண்டைகளாக பிரிக்கவும்.

4. ஒரு தட்டில் சதுர வடிவ ஈரதுணியை விரித்து அதில் ஒரு உருண்டையை வைத்து உள்ளங்கை அளவிற்கு உள்ள ரொட்டியாக தட்டவும்.

5. தோசைக்கல் / நான்ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து காயவைத்து, சிறிது வெண்ணெய் அல்லது நெய் தடவி, பின் தட்டி வைத்துள்ள ரொட்டியை இட்டு இரண்டுபுறமும் நன்கு சிவக்க வேகவைத்து மீண்டும் லேசாக நெய் தடவி எடுத்து சூடாக பரிமாறலாம்.

குறிப்பு

1. நெய் விரும்பாதவர்கள் ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

2. உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க நினைப்பவர்களுக்கு இது ரொம்ப ருசியான மற்றும் சத்தான உணவாகும்.

3. கம்பு உடலில் உள்ள எலும்புகளை பலப்படுத்தும்; வயிற்றுப் புண்ணை ஆற்றும்.

4. மாவு பிசையும் போது சரியான பதம் வரவில்லை என்றால் அதில் சிறிது ரவை, அல்லது சிறிது அரிசி மாவு கலந்து கொள்ளலாம்.

ஆக்கம்

ஜலீலா கமால்
துபாய்.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888