ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்


சமையல் குறிப்புகள்
அல்வா வகைகள்

சோள மாவு அல்வா


தேவையான பொருட்கள்

சோளமாவு - ஒரு கோப்பை
சர்க்கரை - 2 கோப்பை
பால் - 3 கோப்பை
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
கேசரி கலர் - 2 சிட்டிகை
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
நெய் - 100 கிராம்

செய்முறை

1. ஒரு அகன்ற பாத்திரத்தில் பால், சர்க்கரை, சோளமாவு சேர்த்து நன்றாக கட்டி விழாமல் கலக்கவும்.

2. அதனுடன் கேசரி கலர் சேர்த்து கலக்கவும்.

3. முந்திரி, திராட்சையை சிறிது நெய் விட்டு தனியே பொன்நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

4. வாணலியில் சோளமாவுக் கலவையைக் கொட்டி அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல் கிளறவும்.

5. கலவை திரண்டு கெட்டியாக வரும்போது ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.

6. பின்னர் இக்கலவையுடன் சிறிது சிறிதாக நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

7. ஊற்றிய நெய் மேலே திரண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

8. ஒரு தட்டில் நெய் தடவி, அடுப்பிலிருந்து இறக்கிய கலவையை அதில் கொட்டி, ஆறியபின் வேண்டிய வடிவில் துண்டுகளாக்கவும்.

ஆக்கம்

கோ. சுந்தரேஸ்வரி
சென்னை - 600 101.எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888