சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
மீன் உணவு வகைகள் |
சுறா மீன் புட்டு ![]() தேவையான பொருட்கள் சுறா மீன் - 1/4 கிலோ சீரகத்தூள் - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 வெங்காயம் - 1/4 கிலோ இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேஜைக் கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி தக்காளி - 1 கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காய் துருவல் - கால் கோப்பை எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. சுறா மீனை வேக வைத்து எடுத்து, மீன்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும். 2. அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும். 3. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும். 5. பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும். 6. இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும். 7. கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும். குறிப்பு 1. சுறா மீன் வாங்கியதும் அதில் அரை கிலோ எடுத்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் எல்லாம் சிறிது சேர்த்து இரண்டு குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக வைத்து முள்ளுடன் உள்ள மீனை குழம்பிற்கும் (சால்னா) முள்ளில்லாதவைகளை பிரித்தெடுத்து கட்லெட் (அ) புட்டு செய்ய எடுத்து கொள்ள வேண்டும். 2. குழம்பு செய்யும் போது மிளகு சேர்த்து செய்ய வேண்டும், புளி சேர்க்க கூடாது. இது பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது. ஆக்கம் ஜலீலா பானு
துபாய். |