முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா எ.பி.வாஜ்பாய் அவர்களின் மறைவிற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
தமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - என் உள்ளில் எங்கோ - ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
தேவிஸ்கார்னர்.காம்

ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்
     

சமையல் குறிப்புகள்
முட்டை உணவு வகைகள்

முட்டை குழம்பு


தேவையான பொருட்கள்

முட்டை - 4
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
மல்லித்தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மூன்று முட்டையை பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் வரை வேகவைக்கவும்.

2. முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தண்ணீரை வடிகட்டி, முட்டை ஓடு சூடு ஆறியதும், ஓடு நீக்கி, நீளவாக்கில் இரண்டாக வெட்டி வைக்கவும்.

3. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பூண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பூண்டு போட்டு வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

7. இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

8. கொதி வந்ததும் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்.

9. பின்னர் வெட்டி வைத்துள்ள வேக வைத்த முட்டையை சேர்த்து ஒரு கொதி வரும் வரை (2 நிமிடம் வரை) வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.

10. பின்னர் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

ஆக்கம்

கோ. ராஜம்மாள்
சேலம் - 636 003.
மெரினாவில் கலைஞருக்கு இடம்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை
திருச்சி விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்: 19 பேர் கைது
லாவோஸில் அணை உடைந்து வெள்ளம்: 100 பேருக்கு மேல் காணவில்லை
சென்னை மின்சார ரயிலில் படியில் பயணித்த 5 பேர் பலி
மக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு
காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு
காஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா
மதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்