ஆன்மிகம், கலைகள், சமையல் மற்றும் பண்பாட்டு இணைய தளம்
நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


சமையல் குறிப்புகள்
சட்னி வகைகள்

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்

தக்காளி - 1/4 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 5 பல்லு
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 3
தேங்காய் - 1/2 கோப்பை
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும்.

2. பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

3. வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

4. பிறகு இறக்கி வைத்து தேங்காய் துருவல் சேர்த்து ஆற வைக்கவும்.

5. பிறகு மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.

6. பிறகு தாளிக்கும் பொருட்களைக் கொண்டு தாளிக்கவும்.

குறிப்பு

1. அரைக்கும் போது ஒரு கொத்து கருவேப்பிலை, கொத்தமல்லித்தழை போட்டு அரைத்தால் வாசனையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.