சமையல் குறிப்புகள்
சிப்ஸ் வகைகள்

மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்

தேவையான பொருட்கள்

மரவள்ளி கிழங்கு - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 சிறுகரண்டி
மிளகு தூள் - 1/2 சிறுகரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 1 லிட்டர்
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. மரவள்ளிக் கிழங்கை தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும்.

2. பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.

3. பின்னர் வாணலியில் காயவைத்த எண்ணெயில் இட்டு பொரித்து எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

4. சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.

குறிப்பு

1. எண்ணெயில் போட்டவுடன் கொஞ்சம் பொன்நிறத்திற்கு மாறியவுடன் எடுத்துவிடவும். அப்போதுதான் மொறு மொறுப்பாக இருக்கும்.

ச. சுதாதேவி
சென்னை - 600 050.